காஸா மக்களுக்கு மலேசியா – பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன்  17: ஜியோனிச இஸ்ரேல் ஆட்சியின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு மலேசியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்றுபாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றபோது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.

காசா நெருக்கடி தொடர்பாக பாகிஸ்தானின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதில் பிரதமர் ஷேபாஸின் தைரியத்தைப் தாம் பாராட்டியதாக பிரதமர் கூறினார்.

 இஸ்ரேலின் காலனித்துவம் மற்றும் காசா ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதுடன், மற்ற இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க தங்கள் ஆதரவைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என்றும் அன்வார் கூறினார்.

தொலைபேசி அழைப்பின் போது, ​​​​அன்வார் மற்றும் ஷெஹ்பாஸ் இருவரும் ஹஜ்ஜுப் பெருநாள்  வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *