மலேசியன் ஏர்லைன்ஸ் பாரிஸுக்கு நேரடி விமானச் சேவை!
- Shan Siva
- 06 Sep, 2024
கோலாலம்பூர், செப் 6: மலேசியன்
ஏர்லைன்ஸ் அடுத்த ஆண்டு மார்ச் 22 முதல் KLIA
டெர்மினல் 1 இலிருந்து பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான
நிலையத்திற்கு நேரடி விமான சேவையை வழங்குகிறது.
மலேசியா ஏவியேஷன் குரூப் (MAG) வழங்கும் இந்தச் சேவையானது வாரம்
நான்கு விமானங்களை இயக்கும் என்றும், இந்த வழிக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸின் 68வது இலக்கை
பிரதிநிதித்துவப்படுத்தும் பாரிஸ் பாதையில், அதன் ஏர்பஸ் ஏ350-900 விமானம் சேவையாற்றும் என்று குழும நிர்வாக
இயக்குனர் இஷாம் இஸ்மாயில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *