சிங்கப்பூருக்கு வேப் கடத்தல்! மலேசியர் பிடிபட்டார்
- Shan Siva
- 02 Sep, 2026
ஜொகூர் பாரு, செப் 2: ஆகஸ்ட் 20 அன்று துவாஸ் சோதனைச் சாவடியில்,
10,400-க்கும் மேற்பட்ட வேப் சாதனங்கள் மற்றும்
பொதிகளைக் சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற முயற்சியை சிங்கப்பூர் குடிநுழைவு
மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் முறியடித்தனர்.
மலேசியாவில்
பதிவுசெய்யப்பட்ட ஒரு லாரியின் சரக்குப் பகுதியில் ICA அதிகாரிகள் முறைகேடுகளைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 48 வயதான மலேசிய லாரி ஓட்டுநர் சோதனைக்காக
நிறுத்தப்பட்டார்.
அவர் அட்டைப்
பெட்டிகள் மற்றும் பொதியிடும் பொருட்களை ஏற்றிச் சென்றதாக
அறிவிக்கப்பட்டிருந்தார்.
வாகனத்தின்
ஸ்கேன் செய்யப்பட்ட படத்தில் முரண்பாடுகளை ஒரு படப் பகுப்பாய்வாளர் கண்டறிந்து,
அதை மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்துமாறு
உத்தரவிட்டார்.
மேற்கொண்டு
தேடுதல் மற்றும் பரிசோதனை செய்ததில், அதிகாரிகள் அந்த சரக்குகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,400-க்கும்
மேற்பட்ட வேப்பரைசர்களையும், கிட்டத்தட்ட
7,000 பாட்களையும் கண்டுபிடித்தனர் என்று ஐசிஏ நேற்று தனது முகநூல் பக்கத்தில்
தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் கைது
செய்யப்பட்டு, இந்த வழக்கு
சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு (HSA) அனுப்பப்பட்டது.
ஐசிஏ வெளியிட்ட
புகைப்படங்களில், லாரியின்
சரக்குப் பகுதியில் சரக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அறிவிக்கப்பட்ட பொருட்களுக்கு மத்தியில்
கடத்தல் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
குற்றம்
நிரூபிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு இரண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை
சிறைத்தண்டனையும், இரண்டு முதல்
ஐந்து பிரம்படிகளும், அதே சமயம்
இறக்குமதியாளர்களுக்கு மூன்று முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும்,
ஐந்து முதல் பதினைந்து பிரம்படிகளும்
விதிக்கப்படும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



