Waze செயலியை நீக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்!

top-news

சைபர்ஜெயா, அக். 22: பயனர்களின் இருப்பிடம், பயணங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படும் அபாயத்தைக் குறைக்கும் வகையில், Waze வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ராஜா நுஷிர்வான் ஜைனால் அபிடின் இதனைத் தெரிவித்தார்.

Waze செயலி பயன்பாட்டில் இல்லாத நேரங்களிலும், கைப்பேசியின் அமைப்புகளைப் பொறுத்து பயனர்களின் தகவல்களைச் சேகரிக்கக்கூடும் என்ற பாதுகாப்புக் கவலைகளைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தத் தடை அரசாங்க ஊழியர்கள் தங்களின் அதிகாரப்பூர்வப் பணிகளை மேற்கொள்ளும்போது மட்டுமே பொருந்தும் என்றாலும், அரசாங்க ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட கைப்பேசிகளிலிருந்தும் Waze செயலியை நீக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

நாம் Waze செயலியைப் பயன்படுத்தாத நேரங்களில்கூட அது தகவல்களைச் சேகரிக்கக்கூடும்.

எனவே, பொதுமக்களும் தங்களின் கைப்பேசிகளிலிருந்து இந்தச் செயலியை நீக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என்று இன்று சைபர்ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *