மலேசியர்களுக்கு ‘ப்ளாக் மெயில்’ பழக்கமில்லை! – ஜைட் இப்ராஹிம்
- Shan Siva
- 16 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 16: மாநில சட்டங்களை அவமதித்ததாக பெட்ரோனாஸ் மீது சரவாக் சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சையாகப் பேசியதோடு, ஒற்றுமை அரசாங்கத்துடனான தனது உறவை சரவாக் முறித்துக் கொள்ளக்கூடும் என்று அவர் கூறியது குறித்து சட்டத்துறை முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராஹிம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த சட்டசபை
உறுப்பினர் மிகவும் திடுக்கிடும் மற்றும் ஆத்திரமூட்டும் விதத்தில் பேசியுள்ளார்.
மலேசியர்களாகிய நாம் பிளாக்மெயில் செய்து பழக்கமில்லை. பேச்சுவார்த்தை நடத்த
விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழனன்று சரவாக் மாநில ஸ்டாக்கான் சட்டமன்ற
உறுப்பினர் ஹம்சா பிரஹிமின் சட்டமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக
ஜைட் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.
தாம் பெட்ரோனாஸ் அல்லது ஒற்றுமை அரசாங்கத்தின்
சார்பாக பேசவில்லை என்று குறிப்பிட்ட ஜைட் மாறாக கூட்டமைப்பின் ஒரு நல்ல குடிமகனாக
மட்டுமே பேசுவதாகக் கூறினார்.
இது தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டிய தீவிரமான சட்ட மற்றும்
அரசியலமைப்பு சிக்கல்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு சட்ட வாதத்திற்கும் இரண்டு
பக்கங்களும் உள்ளன என்று ஜைட் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *