தாய்லாந்து எல்லைப் பகுதியில் மலேசிய மானிய பெட்ரோல்! 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது!

top-news
FREE WEBSITE AD

சதாவோ, அக் 17:

மலேசியாவில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் மானிய விலை RON95 பெட்ரோல் விற்பனை,  தாய்லாந்து எல்லை ப் பகுதியான தானோக் மற்றும் சதாவோ நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் பரவலாக இருப்பதாக அறியப்படுகிறது.  இருப்பினும் இது முன்பை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

எல்லை நகரமான தானோக்கில் இருந்து சதாவோ வரையிலான 13 கிமீ தூரத்தில் சாலையின் இருபுறமும் குறைந்தது பெட்ரோலை விற்கும் 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பெட்ரோல் 1.5 லிட்டர் மற்றும் 2 லிட்டர் பாட்டில்களில் வைக்கப்பட்டு, பிரதான சாலைக்கு அருகிலுள்ள உணவுக் கடைகள் மற்றும் வாகன பழுதுபார்க்கும் கடைகள் போன்ற வளாகங்களின் முன் மர அடுக்குகளில் வைக்கப்படுகிறது.

ஒரு பாட்டிலுக்கு 30 பாட் (RM3.89) முதல் 35 பாட் (RM4.53) வரை விற்கப்படுகிறது, இது தாய்லாந்து பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலுக்கான சில்லறை விலையுடன் ஒப்பிடும்போது மலிவானது. இது லிட்டருக்கு 35.45 பாட் (RM4.59) ஆகும். மலேசியாவில் RON95 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.05 மட்டுமே. ஏனெனில் இது அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படுகிறது.மலேசிய பெட்ரோலுக்கான பெரும்பாலான விற்பனை இடங்கள் தானோக்கின் புறநகர்ப் பகுதியான சதாவோவைச் சுற்றி உள்ளன, இது மலேசிய எல்லைக்கு அருகில் உள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *