வியட்நாமை வீழ்த்திய மலேசிய அணி! அன்வார் வாழ்த்து!

top-news

கோலாலம்பூர், அக் 6: 2026 ஃபிஃபா ஆசியான் கோப்பைத் தொடரில் வியட்நாமை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்த ஹரிமாவு மலாயா அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார். 

மேலும், இத்தொடரில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் தங்கள் பயணத்தை நிறைவு செய்த தேசிய அணிக்கும் அன்வார் வாழ்த்து தெரிவித்தார்.

தங்கள் மார்பில் உள்ள சின்னத்திற்காகக் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் போராட்ட உணர்விற்காக அனைத்து வீரர்களுக்கும் பயிற்சியாளர் குழுவினருக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து முன்னேறுங்கள், தொடர்ந்து போராடுங்கள், நாட்டைப் பெருமைப்படுத்துங்கள் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

ஜகார்த்தாவில் உள்ள கெலோரா புங் கர்னோ மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில், மலேசியா வியட்நாமை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்த வெற்றியானது, வியட்நாமுக்கு எதிராக மலேசியாவின் பத்தாண்டுக்கும் மேலான வெற்றியில்லாப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *