மலேசிய ஓபன் பேட்மிண்டன்:சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

top-news

கோலாலம்பூர், ஜன.12-

மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் ஓர் ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி மலேசியாவின் யெவ் சின் ஓங் - ஈ யி டெயோ இணையை எதிர் கொண்டது.

இந்த ஆட்டத்தில் இரு தரப்பினரும் முதலில் இருந்தே சிறப்பாக விளையாடினர். இறுதியில் இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி இணை 26- 24, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி, தென்கொரியாவின் வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர்கொள்கிறது.".

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *