உறவுகளை அதிகரித்துக் கொள்ள சவூதியுடனான கூடுதல் பேச்சுகளுக்கு மலேசியா தயார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 13-
சவூதி அரேபியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து கலந்து பேச, அவ்விரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில், சவூதி அரேபியாவுடன் முதலாவது ஒருங்கிணைப்புக் கூட்டத்தை ஏற்று நடத்த மலேசியா தயாராக இருக்கிறது.

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில், நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை நடந்த அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹமட் சல்மானுடனான ஒரு சந்திப்பின்போது, மலேசியாவின் இந்த எதிர்பார்ப்பை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரிடம் தெரிவித்துள்ளார்.

“அச்சந்திப்பின்போது, விரிவுபடுத்தப்பட வேண்டியிருக்கும் மலேசியா-சவூதி அரேபியா உறவுகள் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் கலந்து பேசினோம். வர்த்தகம் மற்றும் முதலீடு, செயற்கை நுண்ணறிவு, பசுமைப் பொருளாதாரம், சுத்தமான எரிபொருள் மற்றும் பெட்ரோலிய ரசாயனம் ஆகியவையும் அந்த பேச்சுகளில் அடங்கும்.

“பரஸ்பர நலன்களின் வட்டார மற்றும் அனைத்துலக சூழ்நிலைகள் மீதான கருத்துகளையும் நாங்கள் பரிமாறிக் கொண்டோம்" என்று. முகநூல் பதிவொன்றில் நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான நெருங்கிய உறவு, ஒட்டுமொத்த மலேசிய மக்களின் செழிப்புக்கும் பங்களிக்கும் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான்-ஜிசிசி (வளைகுடா ஒத்துழைப்பு மன்றம்) உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, அவருக்கு (முஹமட் சல்மான்) அழைப்பும் விடுத்திருக்கின்றேன் என்று அப்பதிவில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அரசு நாடுகள் மற்றும் இஸ்லாமிய சிறப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அன்வார் நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை ரியாத்தில் இருந்தார்.அந்த உச்சநிலை மாநாட்டிற்குப் பிறகு விடுக்கப்பட்ட ஓர் அறிக்கை, காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை அமல்படுத்துமாறும் மனிதாபிமான உதவிகளை அவசரமாக அனுப்புமாறும், ஐநா பாதுகாப்பு மன்றத்தை ஒரு கூட்டு தீர்மானம் கோரியது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *