பிலிப்பைன்ஸுக்கு உதவ மலேசியா தயார்! - அன்வார் அறிவிப்பு

top-news

கோலாலம்பூர், ஜூன் 8: இன்று காலை பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிக்கு அப்பால் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸுக்கு உதவ மலேசியா தயாராக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்தப் பேரழிவு குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, மலேசியாவின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பிலிப்பைன்ஸ் மக்களுடன் உள்ளன என்றும் கூறினார்.

சபாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக அன்வார் குறிப்பிட்டார். மேலும், அவசரகால சேவைகள் முழு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு, அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

மலேசியாவும் பிலிப்பைன்ஸும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆசியான் கூட்டாளிகள். பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காக தாம் பிரார்த்திப்பதாகவும், வரவிருக்கும் கடினமான நாட்களில் அவர்களுக்கு வலிமையும், தைரியமும் கிடைக்கட்டும் மென்றும் அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 7.37 மணிக்கு மின்டானோவில் 50 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்,  குறைந்தது ஒருவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் கட்டிடங்களைச் சேதப்படுத்தியது மற்றும் அப்பகுதி முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *