உலகளாவிய பிரச்சினைகளில் மலேசியாவின் நிலைப்பாடு அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை பாதிக்காது!
- Shan Siva
- 21 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 21: காசாவில் மோதல்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் உட்பட பல சர்வதேச பிரச்சினைகளில் மலேசியாவின் நிலைப்பாடு, அமெரிக்காவுடனான அதன் வலுவான வர்த்தக உறவுகளை பாதிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மலேசியா தனது
வெளியுறவுக் கொள்கையில் உறுதியாக உள்ளது, இது அடுத்த ஆண்டு ஆசியான்
தலைமையை ஏற்கும் போது "மையக் கொள்கையை" பேணுவது உட்பட, அதன் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உரிமைகளுக்காக வாதிடும்
சுதந்திரத்தை நிலைநிறுத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா
மற்றும் ஐரோப்பாவுடனான நமது நல்லுறவு தொடரும். நமது உரிமைகளை அவர்களால் மறுக்க
முடியாது. வலுவான உறவுகளை பேண தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று அன்வார்
கூறினார்.
அதிபர் பைடன் உடனும், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புடனும் நல்ல உறவு இருக்கிறது. இருப்பினும், மலேசியர்களின் மனசாட்சியையும் நாம் வெளிப்படுத்த வேண்டும். நாம் சுதந்திர
வர்த்தகத்தை ஆதரிக்கிறோம், இது சீனா மற்றும் ரஷ்யாவுடனான நமது வர்த்தக
உறவுகளைத் தடுக்காது என்று அன்வார் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *