செவித்திறன் குறையுடையோர் சீ விளையாட்டுப் போட்டி மலேசியா 16 தங்கப் பதக்கங்களை வென்றது!
- Muthu Kumar
- 25 Aug, 2025
ஜாகர்த்தா. ஆக.25-
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாட்டின் கலப்பு இரட்டையர் எட்மன்ட் தியோ செங் கியோங் பூன் வெய் இங் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2025 செவித்திறன் குறையுடையோர் சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா 16 தங்கப் பதக்கங்கள் வென்று அதன் இலக்கை அடைந்தது.
உபசரணை நாட்டில் கிறிஸ்டியன் அகுஸ்தினஸ் சாக்கியா அமாலியாவுடன் உடன் விளையாடிய எட்மன்ட் - வெய்
இங், 21-7, 26-24 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றனர்.இந்த வெற்றியை அரங்கம் நிரம்பியிருந்த மலேசிய ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடும் வகையில் ஜாலூர் கெமிலாங் கம்பீரமாகப் பறக்கவிடப்பட்டது. அதே வேளையில், சதுரங்க போட்டியிலும் மலேசியா மேலும் இரு தங்கப்பதக்கங்களை வென்றது.
புட்சால் காற்பந்து போட்டியில், நாட்டின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரு பதக்கங்களை வென்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



