கார்லோஸ் அல்கராஸ் உலகின் நம்பர் ஒன் இடத்தை உறுதி செய்தார்

top-news

செய்தி – வெற்றி மைந்தன்

துரின், நவ. 14-

ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், துரினில் நடைபெற்ற ஏ.தி.பி இறுதிச் சுற்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, 2025 ஆம் ஆண்டின் ஆண்கள் டென்னிஸ் உலக தரவரிசையில் முதலிடத்தை உறுதி செய்தார். இந்த வெற்றி, இத்தாலியின் ஜானிக் சின்னரை முதலிடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளியது. வரும் திங்கட்கிழமை வெளியாகும் தரவரிசையில் அல்கராஸ் முதலிடத்தைப் பிடிப்பார்.

இந்த ஆண்டு இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அல்கராஸ், ஜிம்மி கானர்ஸ் குழுவில் முதலிடத்தைப் பெற்றார். 2025 சீசனில் 70 போட்டிகளில் வெற்றி பெற்ற அவர், நாளை அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், ஆண்டு இறுதியில் உலகின் நம்பர் ஒன் இடத்தை தக்கவைப்பார். சின்னர், சொந்த மண்ணில் ஏ.தி.பி இறுதிச் சுற்று பட்டத்தைத் தக்கவைத்தாலும், தரவரிசையில் அல்கராஸை முந்த முடியாது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *