‘தும்பட் 2’ படத்தில் இணைந்த ஆலியா பட்

top-news

மும்பை, ஜூலை 14-

 பாலிவுட் நடிகை ஆலியா பட், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திகில்–பேண்டஸி திரைப்படமான ‘தும்பட் 2’ படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

2018-ஆம் ஆண்டு வெளியான ‘தும்பட்’ திரைப்படம், இந்திய நாட்டுப்புறக் கதைகள், புராணம், திகில் மற்றும் பேண்டஸி அம்சங்களை இணைத்த வித்தியாசமான படைப்பாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படம் அண்மையில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது.

முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த சோஹும் ஷா, இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் நவாசுதீன் சித்திகியும் இணைந்துள்ள நிலையில், தற்போது ஆலியா பட்டின் வருகை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஆலியா பட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *