'ஜனநாயகன்' இயக்குநர் எச்.வினோத் தயாரிப்பில் உருவாகும் 'ஆல்மோஸ்ட் நல்லவன்'

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 7 –

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தின் இயக்குநர் எச். வினோத், தயாரிப்பாளராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படமாக 'ஆல்மோஸ்ட் நல்லவன்' அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஆஸ்பையர் உபுண்டு பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை எச். வினோத் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் படத்தை 'பேஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

'பிக் பாஸ் தமிழ் 5' மற்றும் 'குக் வித் கோமாளி 6' மூலம் பிரபலமான ராஜு ஜெயமோகன், இந்தப் படத்தை இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு பாக்ஸ்ன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை டி.எஸ். பிரசன்னா மேற்கொள்கிறார். படத்தொகுப்பை ஆர். கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

'ஆல்மோஸ்ட் நல்லவன்' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் கதை மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *