கமல்-ரஜினி காம்போ உறுதி- ரஜினிகாந்த் உடைத்த ரகசியம்!
- Muthu Kumar
- 18 Sep, 2025
சமீபகாலமாக ரஜினி கமல் இணைவது உறுதி என்பதை போல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏன் கமலே அதை உறுதிபடுத்தியிருக்கிறார். தற்போது ரஜினியும் அதை பற்றி சொல்லியிருக்கிறார். இருவரும் இணையும் படத்தை லோகேஷ்தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், இந்த எதிர்பார்ப்புகளுக்குப் பதில் அளித்தார். அவர், "அடுத்ததாக நானும் கமலும் இணைந்து நடிக்க ரெடி ஆகிட்டோம். ஆனால் அதற்கு இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை. ரெண்டு பேரும் இணைந்து நடிக்கணும்னு ஆசை. அதற்கான சரியான கதை, கதாபாத்திரம் அமையணும். அமைந்தவுடன் நடிக்கிறேன். ஆனால் அந்த பிளான் இருக்கு. கதை, கதாபாத்திரம் இன்னும் ஃபிக்ஸ் ஆகவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.
ஆனால் இவர்கள் இணையும் படத்தை பிரதீப் ரெங்கநாதன் இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது பிரதீப் எல்.ஐ. கே மற்றும் டியூடு போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். அதன் பிறகு எந்தவொரு கமிட்மெண்ட்டுலயும் அவர் இல்லை. அதனால் ரஜினி கமல் படத்தை இவர் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



