ரோபோ சங்கரின் ஆசையை நிறைவேற்றிய கமல்ஹாசன்!

top-news
FREE WEBSITE AD

சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே, ரோபோ சங்கர் ஒரு தீவிரமான கமல்ஹாசன் ரசிகராக இருந்தார். மதுரை போன்ற நகரங்களில் மேடை நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருந்தபோது, அவர் பல இடங்களில், "கமல்ஹாசன் தான் என்னுடைய ஆஸ்தான குரு" என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம்.

சினிமாவிற்கு வந்த பிறகும், ரோபோ சங்கர் தான் ஒரு கமல் ரசிகன் என்பதைப் பெருமையாக எல்லா இடங்களிலும் சொல்லிக்கொண்டே இருந்தார். அது இது எது என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கமல்ஹாசனைப் போலப் பேசியதை, கமல்ஹாசன் நேரில் பார்த்து, இம்ப்ரஸ் ஆகி இருக்கிறார். உடனே, ரோபோ சங்கருக்கு போன் செய்து அவரைப் பாராட்டி இருக்கிறார்.

பின்னர், ரோபோ சங்கரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து, தனது குருவை நேருக்கு நேர் பார்த்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றார். இது, ஒரு ரசிகனுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம்.

கமல்ஹாசனைப் போலவே நடிப்பில் பல பரிணாமங்களை வெளிப்படுத்திய ரோபோ சங்கரின் நீண்ட நாள் ஆசை, கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும், கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கடைசி வரைக்கும் கிடைக்காமல் போய்விட்டது. இந்த ஆசை, நிறைவேறாமலேயே அவர் காலம் ஆகிவிட்டது, அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஒரு மன வலியாகவே இருந்தது.

இந்த நிலையில், ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, கமல்ஹாசன் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவை, தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், ரோபோ சங்கரின் நிறைவேறாத கனவை, அவரது மகளின் மூலம் நிறைவேற்றி வைக்கப்போவதாகக் கூறப்படுகிறது.

இது, கமல்ஹாசனுக்கும், ரோபோ சங்கருக்கும் இடையே இருந்த ஆழமான அன்பையும், பாசத்தையும் காட்டுகிறது. ரோபோ சங்கரின் பேரனுக்குக் கூட, கமல்ஹாசன் தான் நட்சத்திரன் என்று பெயர் சூட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகன், தனது ரசிகனின் திறமையைப் பாராட்டி, அவருடைய வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து, மறைந்த பிறகும் அவருடைய கனவை நிறைவேற்றுவது என்பது சினிமா உலகிலேயே ஒரு அபூர்வமான சம்பவம். சக நடிகனாக மட்டுமல்லாமல் தன்னுடைய ரசிகனின் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *