சிவகார்த்திகேயனை புகழ்ந்த கமல்ஹாசன்!
- Muthu Kumar
- 09 Sep, 2025
சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் சிறந்த படம் என்ற விருதை அமரன் வென்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன், சாய் பல்லவி மற்றும் ராஜ்குமார் பெரியசாமி என பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின்போது, மேடையில் பேசிய கமல்ஹாசன், அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயனின் உழைப்பு பற்றி கூறியிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், சிவகார்த்திகேயனை புகழ்ந்திருந்தார். அதில் அவர், "அமரன் படத்திற்காக தோற்றத்தை மாற்றுங்கள் என்றதும் செய்துவிட்டார் சிவகார்த்திகேயன். உடற்பயிற்சி செய்ங்க என்பது, கப்பை எடுத்து கொடுப்பது போல இல்லை, 100 தடவையாவது தம்பிலை தூக்கினால்தான் அந்த கை, அமரன் கையாக மாறும்" என்று நடிகர் கமல் ஹாசன், சிவகார்த்திகேயனை குறித்து புகழ்ந்து பேசியிருந்தார்.
அமரன் படமானது, இந்த 2025ம் ஆண்டில் நடைபெற்றிருந்த சைமா விருது வழங்கும் விழாவில் சுமார் 4 விருதுகளை வென்றது. அமரன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கு, சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த கதைக்கான விருது அமரன் படத்திற்கு மற்றும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷிற்கும் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட அமரன் படத்திற்கும் மட்டுமே 4 விருதுகள் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் போதுதான், கமல்ஹாசன் ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



