கமல் மற்றும் சிம்பு இணைந்து நடிக்கும் 'தக் லைப்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு..

top-news

நாயகன் படத்திற்கு பின் கமலும் மணிரத்தினமும் 36 வருடங்களுக்கு பின் தக் லைஃப் படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கமலின் விக்ரம் படம் நல்ல வசூலை பெற்றதால் இப்போது இது சாத்தியமாகி இருக்கிறது.

இப்படத்திற்கான கதையை கமல்ஹாசனும், மணிரத்தினமும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். அதோடு, இப்படத்தில் திரிஷாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தக் லைப் படத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், மங்காத்தா அஜித் ஸ்டலில் ஜீப்பை வேகமாக ஓட்டி வரும் சிம்பு துப்பாக்கியை எடுத்து ஒருவரை சுடுவது போன கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *