ஈரானில் அமெரிக்காவின் புதுவகை ஏவுகணை தாக்குதல் – 50 மீட்டர் தொலைவிலும் உயிரிழப்பு
- Surendran Sumdraraj
- 01 Sep, 2026
நியூயார்க், செப். 1 –
ஈரான் மீது நடைபெற்ற மோதலின்போது அமெரிக்க ராணுவம் புதிய வகை ஏவுகணையை முதன்முறையாக பயன்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணை தாக்கிய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருந்தவர்களும் உயிரிழந்ததாகப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டதை தொடர்ந்து, மேற்காசிய பகுதியில் கடந்த சில மாதங்களாகப் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா புதிய வகை ஏவுகணையை பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் இந்த ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்குவதுடன், வெடிக்கும்போது ஏராளமான சிறிய துண்டுகளாக சிதறி பரந்த பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



