சீன ரோபோக்களுக்கு அமெரிக்கா அதிரடி தடை
- Surendran Sumdraraj
- 30 Jul, 2026
வாஷிங்டன், ஜூலை 30-
சீனாவில் தயாரிக்கப்படும் புதிய மனித வடிவ (Humanoid) ரோபோக்கள், நான்கு கால்கள் கொண்ட ரோபோ நாய்கள் மற்றும் மின்சார இணைப்பு சாதனங்கள் (Power Inverters) ஆகியவற்றின் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க பெடரல் தகவல் தொடர்பு ஆணையம் (FCC) தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இணைய இணைப்புடன் செயல்படும் இந்த ரோபோக்கள் முக்கிய உள்கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் நிலையில், அவை இணையத் தாக்குதல், தரவு திருட்டு அல்லது உளவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தாலும், ஏற்கனவே அமெரிக்க சந்தையில் அனுமதி பெற்ற தயாரிப்புகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



