நேப்பாள் வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் குடும்பத்தினர் நாளை வெளியுறவு அமைச்சுடன் சந்திப்பு!
- Shan Siva
- 26 Sep, 2026
கோலாலம்பூர், செப் 26: நேபாளத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தங்கள் உறவினர்களைத் தேடும் பணிகள் குறித்த விவரங்களை அறிய 'விஸ்மா புத்ரா' அதிகாரிகளை நாளை சந்திக்கவுள்ளனர்.
காணாமல் போன மலேசியர்களில் சிலர் கடைசியாகக் காணப்பட்டதாகக் கருதப்படும் நேபாளத்தின் ரசுவாகாதி-கெருங் (Rasuwagadhi-Kerung) எல்லைப் பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல்களைக் கோரி, ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.
சிறப்பு மலேசிய பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவை (SMART) அனுப்பியது மற்றும் விஸ்மா புத்ரா தலைமையிலான தூதரக நடவடிக்கைகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் முயற்சிகளைத் தாங்கள் பாராட்டுவதாகவும், அதே வேளையில் சீனா-திபெத் பகுதியிலும் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் குறித்து கூடுதல் தெளிவு தேவைப்படுவதாகவும்
'மலேசியா சாலிடாரிட்டி: ஃபேமிலிஸ் இன் ஹோப்' (MASFIH) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார்.
SMART குழுவினரின் அர்ப்பணிப்பு அல்லது தொழில்முறைத் திறன் குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை; ஆனால், சரியான முன்னுரிமைகளின் அடிப்படையில் சரியான நேரத்தில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டதா மற்றும் குடும்பத்தினரால் அடையாளம் காட்டப்பட்ட பகுதிகளில் முழுமையான தேடுதல் பணி நடத்தப்பட்டதா என்பதுதான் எங்கள் கேள்வி என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு காணாமல் போன 55 மலேசியர்களில், டாக்டர் மணிவண்ணனின் இளைய சகோதரி கோமதி (48) என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

