உலகின் மூத்த மொழி தமிழ்தான்!- மோடி

top-news

உலகிலேயே பழமையான மற்றும் மூத்த மொழி தமிழ் தான். இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. தமிழ் மொழியை கற்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று இந்திய பிரதமர் மோடி தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் கூறினார்.மோடி தான் பிரதமர் ஆனது முதல் கடந்த 2014ல் இருந்து 'மன் கீ பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்திய நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 118 வது மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மோடி தமிழ் மொழி தான் உலகில் பழமையான மொழி என்று தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பேசினார். இதுதொடர்பாக மோடி உலகிலேயே மிகவும் பழமையான, மூத்த மொழி என்றால் அது தமிழ் தான். இதனை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் தமிழ்மொழியை கற்போரின் எண்ணிக்கை என்பது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் பிஜியில் (Fiji) மத்திய அரசு சார்பில் தமிழ் கற்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பிஜியில் தமிழ் கற்று கொடுக்கின்றனர். பிஜியில் உள்ள மாணவர்கள் தமிழ் மொழி, கலாசாரத்தை கற்பதில் ஆர்வமாக உள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்'' என்று கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *