11 மான்செஸ்டர் விளையாட்டாளர்களுக்கு விடுமுறை தடை - அமோரிம்

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

இங்கிலாந்து, நவ. 20-

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் ரூபென் அமோரிம், அனைத்துலக போட்டிகள் இடைவெளியின் போது விடுமுறை எடுக்க தடை விதித்துள்ளார். இந்த விதி, தேசிய அணிகளுக்கு அழைக்கப்படாத 11 வீரர்களுக்குப் பொருந்தும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த முடிவு, கடந்த ஆண்டு மார்கஸ் ரேஷ்போர்ட், காசெமிரோ ஆகியோரின் சர்ச்சைக்குரிய அமெரிக்கா பயணங்களுக்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரேஷ்போர்ட், இங்கிலாந்து அணிக்கு அழைக்கப்படாத நிலையில், நியூயார்க்கில் கூடைப்பந்து போட்டியைப் பார்த்தார். காசெமிரோ, பிரேசில் அணியைத் தவிர்த்து, புளோரிடாவில் டிஸ்னி உலகத்தைப் பார்வையுற்றார். இந்த நீண்ட பயணங்கள், வீரர்களின் உடல் நலத்தை பாதிக்கும் எனவும், அணியின் சோதனைக்கட்டத்தில் தவறான செய்தியைத் தரும் எனவும் புகழ்பெற்ற முன்னாள் வீரர் கேரி நெவில்ல் கண்டித்தார்.

அமோரிம், யூனைடெட் பயிற்சியாளராக இரண்டு வாரங்களே இருந்தபோது, ரேஷ்போர்ட், காசெமிரோவைத் தற்காத்து பேசினார். ஆனால், ஆட்டக்காரர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இனி விடுமுறை விடயத்தில் நான் முடிவு எடுக்கிறேன். வீரர்கள் பறக்கக் கூடாது என்று அமோரிம் வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *