கே.பி.சாமி- பி.கே.ஆர் கட்சியில் சேர முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது-ஓம்ஸ் பா.தியாகராஜன்!

top-news
FREE WEBSITE AD

மலேசிய அரசியல் வரலாற்றில் நீண்ட கால அனுபவம் உள்ளவர் கே.பி.சாமி. பல சவால்கள், பல போராட்டங்களைச் சந்தித்தவர். ம.இ.கா-வின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்தவர். தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் கே.பி.சாமி தற்போது பி.கே.ஆர் கட்சியில் சேர முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்றும், இதனைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும் மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகரஜன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, சவால்களைச் சமாளித்து இன்று உலகம் வியக்கும் பிரதமராக நமது பிரதமர் வலம் வருகிறார். அதனை உணர்ந்து அன்வாரது தலைமையின் கீழ் இயங்குவதே சரியானது எனப் பொருத்தமான முடிவை எடுத்திருக்கும் அன்புச் சகோதரருக்கு எனது வாழ்த்துகள்.

பல்வேறு கட்சிகள் அவரை அழைத்தவண்ணம் இருந்த வேளையில், பி.கே.ஆர்தான் எனது முடிவு என சரியான பாதையில் பயணிக்கும் அவரின் மக்களுக்கான பணி தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தேர்தலுக்கு முன் இந்த முடிவினை கே.பி.சாமி எடுத்திருந்தால், அவர் மாண்பு மிகு ஆகியிருக்கும் சாத்தியம் உண்டு. அப்போது நேரம் காலம் சரியாக அமையவில்லை. ஆனால், இனி வரும் காலங்கள் அவருக்கு நல்ல காலமாய் அமையட்டும் என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *