எனக்கும் ஹம்சாவுக்கும் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை! - அமாட் பைசால் அசூமு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 10: பெர்சாத்து துணைத் தலைவர் பதவியை கட்சியின் பொதுச் செயலாளரிடம் விட்டுக்கொடுத்த பிறகு, ஹம்சா ஜைனுதீனுடன் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியாகும் ஊகங்களை அமாட்  பைசால் அசூமு நிராகரித்தார்.

தானும் ஹம்சாவும் கட்சி விவகாரங்களை நிர்வகிப்பதில் நெருக்கமான தொடர்பையும் ஒத்துழைப்பையும் பேணுவதாகக் கூறியதாக Utusan Malaysia செய்தி வெளியிட்டுள்ளது.

ஹம்சா கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தன்னுடன்  சந்திப்பில் இருக்கிறார்.  தொலைபேசியில் தொடர்பில் இருப்போம், என்று அவர் மேற்கோள் காட்டினார்.

துணைத் தலைவருக்கான ஹம்சாவின் வேட்புமனுப் படிவத்தை சமர்ப்பித்தவர் ரொனால்ட் கியாண்டியால் ஆதரிக்கப்பட்டது என்றும் பைசல் வெளிப்படுத்தினார்.

கடந்த ஜூலை 13 ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள செலாயாங்கில் பெர்சாத்துவின் மாநாட்டைத் தொடர்ந்து, பெரிகாத்தான் தேசியச் செயலாளராகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் ஹம்சா ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஹம்சாவுக்கு வழிவிட பைசல் ஒப்புக்கொண்டதாக முகைதீன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *