ஜன நாயகன்' வெளியீடு: இசை விழா ஒளிபரப்பு தேதி!
- Muthu Kumar
- 31 Dec, 2025
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி 4-ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் கால்பதித்துள்ள நடிகர் விஜய், முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளதால், அவர் நடிக்கும் கடைசித் திரைப்படம் இதுவே எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, 'ஜன நாயகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே மட்டுமன்றி ஒட்டுமொத்தத் திரைத்துறையினரிடையேயும் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், இவ்விழாவின் ஒளிபரப்பு குறித்த தகவலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு 'ஜீ 5' (Zee5) தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9-ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத்தின் இயக்கம் மற்றும் விஜய்யின் அரசியல் கலந்த திரைக்கதை என்பதால், பொங்கல் ரேஸில் 'ஜன நாயகன்' முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



