ரோனால்டோ, டிரம்ப் வெள்ளைமாளிகை சந்திப்பு: கலகலப்பான தருணங்கள்!

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

வாஷிங்டன், நவ. 20-

புகழ்பெற்ற போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரோனால்டோ, அவரது துணை ஜியோர்ஜினா ரோட்ரிகெஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அதிகாரபூர்வ விருந்தின் போது சிரித்து மகிழ்ந்த தருணங்கள் வெள்ளைமாளிகை வீடியோவில் பதிவாகியுள்ளன. அரசியல், விளையாட்டு உலகின் சிறந்தவர்களுடன் ரோனால்டோ இணைந்து கொண்டார்.

ரோனால்டோ, அரபு சவுதி அரசு, அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று ரீதியான இரு தரப்பு சந்திப்புக்கு பின் நடைபெற்ற அதிபர் விருந்துக்கு வாஷிங்டனை அடைந்தார். 40 வயது இந்த நட்சத்திரம், கருப்பு டக்ஸிடோவில் அழகாகத் தோன்றி, எலான் மஸ்க், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் போன்ற உலகளாவிய தலைவர்களுடன் ஒரே வரிசையில் அமர்ந்தார்.

டிரம்ப், விருந்தினர்கள் முன்னிலையில் ரோனால்டோவைப் பாராட்டி, தனது மகன் ரோனால்டோவின் மிகப் பெரிய ரசிகன் என்று கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *