FA கிண்ண கால்பந்து! மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி!

top-news




உலகமே பரபரப்பாக எதிர்பார்த்த மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையிலான இங்கிலாந்து கால்பந்து  FA கிண்ண  இறுதி ஆட்டம், லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில்
நேற்று நடைபெற்றதில்,  மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல்கணக்கில், மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

முதல் பாதியில் இரண்டு கோல்கள் அடித்து 2-1 என வெற்றியைத் தக்கவைத்தது மான்செஸ்டர் யுனைடெட்.

அவ்வணிக்குப் பெரும் ஏமாற்றம் அளித்த லீக் தொடருக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யுனைடெட் ஒரு ஏமாற்றமான சீசனுக்குப் பிறகு பின்தங்கிய நிலையில் வந்து லீக்கில் 8வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


முதல் பாதியில் மான்செஸ்டர் யுனைடெட் இரண்டு கோல்கள் அடித்து வெற்றியை அமைத்தது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் ஐரோப்பிய கால்பந்தின் இரண்டாம் நிலையான யூரோப்பா லீக்கில் ஓர் இடத்தைப் பெறுகிறது.

35 ஆட்டங்களில் மான்செஸ்டர் சிட்டியின் முதல் தோல்வி இதுவாகும்.


எஃப்ஏ கோப்பை இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட்டின் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ தொடக்க கோலை செலுத்தினார்.

19 வயதான அலெஜான்ட்ரோ கர்னாச்சோ மற்றும் கோபி மைனூவின் கட்டுப்பாட்டில் கோல்கள் அவர்கள் வசமாகின.

30வது நிமிடத்தில் சிட்டி டிஃபென்டர் ஜோஸ்கோ க்வார்டியோல் மற்றும் கோல்கீப்பர் ஸ்டீபன் ஒர்டேகா ஆகியோரின் தவறுகளால்  கர்னாச்சோ கோல் அடித்தார்.

மைனூ பின்னர் 39வது நிமிடத்தில் இரண்டாவது கோலை புகுத்தினார்.

இரண்டாவது பாதியில் சிட்டி அழுத்தத்தைக் குவித்தது, இறுதியில் 87வது நிமிடத்தில் மாற்று வீரர் ஜெர்மி டோகுவின் லாங் ரேஞ்ச் ஷாட் மூலம் ஆட்டத்திற்குத் திரும்பியது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *