SJKT பண்டார் செகாமாட் ஹாக்கி மைதான கனவு நனவாகிறது!
- Shan Siva
- 16 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 16: நீண்ட காலமாக நிலுவையில் இருந்த SJKT பண்டார் செகாமாட் ஹாக்கி மைதான நிலப் பிரச்சினைக்கு கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் மூலம் தீர்வு கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
SJKT பண்டார் செகாமாட்
பள்ளிக்கு வருகை தந்த அவர், முகிம் செகாமாட்,
லாட் 8740 பகுதியில் அமைந்துள்ள கூடுதல் 1.9 ஹெக்டேர் நிலத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக் கடிதத்தை
வழங்கினார்.
இந்த
மகிழ்ச்சியான செய்தி பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்களால் மட்டுமல்லாமல், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் செகிஜாங் இந்திய சமூகத்தினராலும் மிகுந்த
மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. கல்வி மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும்
இந்த முயற்சி பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்து வந்த நிலையில்
தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பள்ளியின்
வளர்ச்சி தேவைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
பெற்றோர்-ஆசிரியர் சங்கத்திற்கு (PIBG) இரண்டு வார கால அவகாசம் வழங்கினார். பள்ளிக்கான கூடுதல் கட்டிடம் கட்டுதல்
மற்றும் பள்ளி பாதுகாப்பை மேம்படுத்த தீயணைப்பு நீர்க்குழாய் (Fire
Hydrant) அமைத்தல் போன்ற தேவைகள்
முன்வைக்கப்பட்டதாக தியாகராஜ் சங்கர நாராயணன் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய
நிலப்பரப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கும் இந்தத் திட்டம் பள்ளியின் தேவையை
நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், வருங்கால
தலைமுறைகளுக்கான ஒரு மாபெரும் பாரம்பரியச் சின்னமாகவும் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

