அனைத்து MP-க்களுக்கும் கட்டாய உடல்நலப் பரிசோதனை! சபாநாயகர் உத்தரவு!
- Shan Siva
- 17 Jul, 2024
கோலாலம்பூர், ஜூலை 17: நவம்பர் 11-ஆம் தேதிக்குள்
எம்.பி.க்கள் கட்டாயம் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவை
சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்யத்
தவறினால் அவர்களின் பெயர்கள் நாடாளுமன்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்
வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த மருத்துவ
பரிசோதனை அனைத்து எம்.பி.க்களுக்கும் கட்டாயமாகும் என்றும், இதற்கான கடைசி
தேதி வரும் திங்கட்கிழமை, நவம்பர் 11 என்றும் அவர் இன்று நாடாளுமன்றக்
கூட்டத்தின் தொடக்கத்தில் கூறினார்.
சமீபத்தில்
எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் சுகாதார பரிசோதனை குறித்த தேவையான
தகவல்கள் அடங்கியுள்ளதாக ஜொஹாரி கூறினார்.
மேலும்
பார்லிமென்ட் கிளினிக் தலைவரும்,
பார்லிமென்ட் சுகாதார
ஆலோசகருமான டாக்டர் முருகேசு ராஜுவிடம் இருந்து கூடுதல் தகவல்களை அவர்கள் பெறலாம் என்று
சபாநாயகர் ஆலோசனை கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *