இந்தியில் 100 கோடி வசூல் செய்த காந்தாரா சாப்டர் 1

top-news
FREE WEBSITE AD

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த அக்டோபர் 2ம் தேதி வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் கர்நாடகாவில் 170 கோடி வசூலும் இந்தியில் 100 கோடி வசூலும் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக தமிழில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான இட்லி கடை திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலகளவில் இதுவரை 50 கோடி பிளஸ் வசூலை மட்டுமே கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோவாக நடித்த நிலையிலும், இந்தியில் அந்த படம் பெரிய வசூல் வேட்டையை நடத்தவில்லை. ஆனால், அக்டோபர் 2ம் தேதி வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 100 கோடி வசூலை இந்தியிலேயே அள்ளியுள்ளது. உலகளவில் 427 கோடி வசூலை படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடிய விரைவில் 500 கோடி வசூலை காந்தாரா சாப்டர் 1 கடந்து கூலி படத்தின் மொத்த வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் காந்தாரா சுமார் 30 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *