தங்கலான் திரைப்படத்தின் முன்னோட்டம் உலக தரம்! விக்ரம் விருதுகளை அள்ளுவாரா?

top-news

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'சீயான்' விக்ரமின் தங்கலான் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.தங்கலான் படத்தில் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன், பசுபதி, ஹரி கிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2021 ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு நிறைவுப் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோலார் தங்க சுரங்க பகுதியில் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 3 முறை ரீலிஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டநிலையில் இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *