கங்குவா படத்தில் நடிப்பில் மிரட்டும் நடிகர் சூர்யா!

top-news

கங்குவா படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.ஞானவேல் ராஜா பெருமையுடன் தயாரித்த இந்தப் படத்தில் சூர்யா முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்துள்ளார்.

பாபிதியோல் மூர்க்கமான வில்லனாக நடித்துள்ளார். திஷாபதானி, யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி, ஜெகபதி பாபு, நட்டி, கோவை சரளா உள்பட பலரும் நடித்துள்ளனர். 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.1000 கோடி வரை தாராளமாக வசூலை ஈட்டும் என்றும் சொல்லப்படுகிறது. சென்னை, கோவா, கேரளா, கொடைக்கானல், ராஜாமுந்திரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்திற்கான அறிவிப்பு 2019லேயே வந்துவிட்டது.

ஆனால் படம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்காக சூர்யா ரொம்பவே மாஸாக நடித்துள்ளார். படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சனி, ஞாயிறு விடுமுறை தினம் வருவதால் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *