ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல அனிக் இலக்கு

top-news

கோலாலம்பூர், 30 -
 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தேசிய எடை தூக்கும் வீரர் முஹமாட் அனிக் கஸ்டான் பதக்கம் வெல்வதற்கு இலக்கு கொண்டிருக்கிறார்.
இருப்பினும், தமது இலக்கை அடைவதற்கு மொத்தமாக 300 கிலோ கிராம் எடையை தூக்கவேண்டும் என்பது 
எளிதானது அல்ல என்பதையும் அவர் கூறினார்.
2020ஆம் ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும்  தாய்லாந்து உலக எடை தூக்கும் போட்டியிலும் தாம் பதிவு செய்த அடைவுநிலையின் அடிப்படையில் இந்த இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக முஹமட் கூறினார்.
ஆடவருக்கான 61 கிலோ கிராம் பிரிவில் அனிக் கலந்து கொள்ளவிருக்கிறார்.
துருக்கியில் நடைபெறவிருக்கும் பயிற்சியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, ஜூன் மாதம் முழுவதும் பகாங் ரொம்பினில் பயிற்சி பெறவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *