நேபாள நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வங்கிகள் கடன் தவணை சலுகை

top-news

கோலாலம்பூர், அக் 23: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்க, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மற்றும் நெகிழ்வான கட்டண ஏற்பாடுகளை மலேசிய வங்கிகள் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தங்களது உறவினர்களைத் தேடி வரும் குடும்பங்கள் இந்த உதவிகளைப் பெறலாம் என மலேசிய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை வங்கிகள் நேரடியாகத் தொடர்புகொண்டு வருவதாகவும் சங்கம் கூறியது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்த சங்கம், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்கும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும், நிர்வாக நடைமுறைகளை முடிப்பதற்கும் ஒவ்வொரு வங்கியிலும் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசிய மத்திய வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகளைத் தொடர்ந்து வழங்குவோம் என மலேசிய வங்கிகள் சங்கம் உறுதியளித்துள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *