ஹன்னா யோவின் கணவர் தொடர்பான ஒப்பந்த விவகாரம்... பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு!

top-news
FREE WEBSITE AD

மத்திய மந்திரியின் கணவருடன் தொடர்புடைய ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட போக்குவரத்து தொடர்பான திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு சிலாங்கூர் அரசாங்கத்திற்கு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் ஹாரிசன் ஹாசன், திட்டம் மறு டெண்டர் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

அரசு ஒப்பந்தத்தை Asia Mobiliti Technologies Sdn Bhd (Asia Mobiliti) க்கு வழங்குவதற்கான முடிவு, அதிகாரத்தை துஷ்பிரயோகம் மற்றும் நேபாட்டிசம் செய்வதாகும் என்று ஹாரிசன் தெரிவித்தார்.

ஹன்னா யோவின் அமைச்சரவை பதவிக்கும், மாநில அரசாங்கத்தின் முடிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆதரித்தவர்களின் ஆழமற்ற தன்மை, நேர்மையின்மை மற்றும் அப்பாவித்தனத்தால் தாம் ஏமாற்றமடைவதாக  அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

ஏசியா மொபிலிட்டி தலைமைச் செயல்முறை அதிகாரி ராமச்சந்திரன் முனியாண்டி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் கணவர் என்பதால், இவ்விவகாரம்  கேள்விகளுக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மன் இடாம், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், ஒப்பந்தத்தை வழங்குவதற்கான அதன் முடிவை விளக்குமாறு மாநில அரசாங்கத்தை அவர் வலியுறுத்தி

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *