பங்கேற்பாளர்கள் பாதுகாப்பு, ஆரோக்கியம் உறுதிப்படுத்த ஹன்னா இயோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தினார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 17-

மலேசிய இளையோர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ, விளையாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை, பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் எப்போதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஏற்பாட்டாளர்கள் மருத்துவ வசதிகள், அவசரகால மீட்புத் திட்டங்கள், சுகாதார நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஹன்னா கூறினார். மேலும், தேசிய விளையாட்டு நிறுவனத்துடன் இணைந்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்கு அமைச்சு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, வெப்பமான காலநிலையில் நடைபெறும் வெளிப்புற நிகழ்ச்சிகளில் மருத்துவ உதவி மையங்களை அமைப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அண்மையில் நடைபெற்ற ஒரு மராத்தான் நிகழ்ச்சியில், மோசமான ஏற்பாடுகள் காரணமாக பங்கேற்பாளர்கள் பாதிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் முன் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

தேசிய விளையாட்டு மையத்துடன் அனைத்து மாநில விளையாட்டு சங்கங்களுடன் இணைந்து, பயிற்சியாளர்கள், ஏற்பாட்டாளர்களுக்குப் பாதுகாப்பு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி, பங்கேற்பாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதோடு, மலேசியாவில் விளையாட்டு நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Marcy

Скоро ЕГЭ, а вы всё ещё сомневаетесь, с чего начать? Профессиональная подготовка к ЕГЭ по русскому языку — уже стартовали! Вас обучают практикующие учителя. Вы получаете: - Подробное объяснение всех форматов заданий - Домашние задания с проверкой - Чаты с преподавателями - Полноценная подготовка Формат: на собственной платформе — все записи сохраняются. Осталось мало мест! Подробнее на сайте: как справиться с волнением перед ЕГЭ