அரசு ஊழியர்கள் வேஸ் செயலியைப் பயன்படுத்தத் தடை – தேசியப் பாதுகாப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கை என அன்வார் விளக்கம்

top-news

கோலாலம்பூர், அக் 22: மலேசிய அரசு ஊழியர்கள் வேஸ் (Waze) வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்துவதற்கான தடை, இஸ்ரேல் அரசாங்கம் அரசு தகவல்களையும் பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வேஸ் நிறுவனமானது இஸ்ரேல் சட்டத்தின்கீழ் செயல்படும் தரவுக் கட்டுப்பாட்டு நிறுவனமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அரசின் முக்கியத் தகவல்களும் பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளும் நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மலேசியர்கள் வேஸ் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூறப்படும் உள்ளூர் செயலியான டுஜு (TuJu) செயலிக்கு மாறுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற்ற தேசிய இணையப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இந்தத் தடை முடிவு செய்யப்பட்டதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வேஸ் செயலியை, கூகுள் நிறுவனம் 2013ஆம் ஆண்டு சுமார் 1.15 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *