ஆற்றில் ஆடவர் சடலம் - காவல்துறை தீவிர விசாரணை!

top-news

கோலாலம்பூர், நவ 17:  சுங்கை பூலோ அருகே கம்போங் மெர்பாவ் செம்பாக் பகுதியில் உள்ள ஆற்றில் ஆடவர் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.35 மணியளவில் பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஆடவருக்கு வலது கழுத்துப் பகுதியில் நட்சத்திர வடிவிலான டாட்டு இருப்பதாகவும், அவர் சட்டை அணியாமல் நீல நிற ஜீன்ஸ் மற்றும் காலுறைகள் மட்டும் அணிந்திருந்ததாகவும் சுங்கை பூலோ மாவட்டக் காவல்துறைத் தலைவர் முகமட் ஹஃபிஸ் முகமட் நோர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஆடவரின் இடது கையில் காயங்கள் காணப்பட்டதாகவும், அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அன்றைய தினம் இரவு 7.40 மணியளவில் உலு சிலாங்கூர், புன்சாக் ஆலாம் UiTM மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவரை அடையாளம் காண உதவக்கூடிய தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது தங்களுடைய குடும்ப உறுப்பினர்களைக் காணவில்லை எனக் கருதுபவர்கள் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்