ஜெயிலர் 2 படத்தில் இணையவிருக்கும் சந்தானம்!

top-news

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிவருகிறது. படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மும்முரமாக நடந்துவருகிறது. இதில் ரஜினியுடன் பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். படத்தின் முதல் பாகம் எப்படி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதோ அதே போன்ற ரிசல்ட்டைத்தான் இந்தப் படத்திலும் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு நெல்சன் பணியாற்றிவருவதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் சந்தானமும் இப்படத்தில் முக்கியமான ரோல் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எஸ்டிஆர் 49 படத்தில் காமெடியன் ரோலை ஏற்றிருக்கிறார் அவர். அதேபோல் ஜெயிலர் 2விலும் நடிக்க அவர் முடிவெடுத்திருப்பதாகவும்; பெரிய ஹீரோக்கள் படத்தில் மட்டும் காமெடி ரோலை ஏற்கலாம் என்ற எண்ணத்துக்கு அவர் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *