முதுகில் குத்திய அம்னோ! டி.ஏ.பி சாடல்! – ஒற்றுமை கூட்டணியில் குழப்பம்!
- THINAGAREN SANGGAREN
- 07 Oct, 2026
அக்தோபர் 7,
நெகிரி செம்பிலான் ஆளுநர் விவகாரத்தில் அம்னோவின் சூழ்ச்சிகள் மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரானது என டி.ஏ.பி பொதுச் செயலாளர் Anthony Loke சாடினார். நெகிரி செம்பிலான் ஆளுநரான Tuanku Muhriz Tuanku Munawir-ஐ பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில அம்னோ ஆட்சிக் குழு உறுப்பினர்கள் 10 பேரும் மலாய் கூட்டாட்சியை மீறியிருப்பதாகவும் Anthony Loke குற்றம்சாட்டினார்.
டி.ஏ.பி ஆட்சியில் இருக்கும் எந்தவொரு மாநிலத்திலும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் சுல்தான்களும் எதிராக டி.ஏ.பியினர் செயல்படுவது இல்லை. ஆனால் எங்களை மலாய்க்காரர்களுக்கும் மலாய் ஆட்சியாளர்களும் எதிரானவர்கள் என அம்னோ தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ஆனால் இப்போது அம்னோவே மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என Anthony Loke சுட்டிக்காட்டினார். நெகிரி செம்பிலான் மாநில ஆளுநரை அங்கீகரிக்கவில்லை என்றால் எதற்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்தலுக்குப் பின்னர் ஆளுநர் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்? என Anthony Loke கேள்வி எழுப்பினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

