அன்வாரின் முடிவுக்காகக் காத்திருக்கிறேன்! பதவி விலகுவதில் அந்தோணி லோக் உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 25 Sep, 2026
செப்டம்பர் 25,
டி.ஏ.பி பொதுச் செயலாளரான Anthony Loke தனது போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதிலிருந்து தனது முடிவை மாற்றிக் கொள்ள போவதில்லை என உறுதியளித்தார். தற்போது சீனாவில் தொழில் முதலீடுகள் பங்குச் சந்தை வர்த்தக மாநாட்டில் பிரதமர் அன்வாருடன் இருக்கும் அந்தோணி லோக், தனது பதவி விலகலில் உறுதியாக இருப்பதாகவும் சமரசம் செய்துக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்றும் தெரிவித்தார்.
பிரதமர் அன்வாரிடம் இப்போதைக்குத் தனது பதவி விலகல்
குறித்து பேசவில்லை. இது பொறுத்தமான நேரமும் இடமும் இல்லை. நாங்கள் மலேசியா திரும்பியதும்
எனது பதவி விலகலுக்குக் காரணங்களைப் பிரதமர் அன்வாரிடம் விலக்குவேன் என Anthony Loke தெரிவித்தார். அமைச்சராக எனது பொறுப்புகள் இன்னும் மிச்சம் உள்ளது. அதனை நான்
பாதிலேயே விட்டுவிட்டு செல்ல முடியாது. இந்த சீனா பயணம் முன்னமே திட்டமிடப்பட்டது என்பதால்
மலேசியா திரும்பியதும் பிரதமர் அன்வாரின் முடிவுக்காகக் காத்திருப்பேன் என Anthony Loke தெரிவத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

