ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸில் தொடருமா கிமி ஆண்டோனெல்லியின் வெற்றிப் பயணம்?

top-news
FREE WEBSITE AD

பார்சிலோனா, ஜூன் 11 –

மெர்சிடீஸ் அணியின் 19 வயதான இளம் நட்சத்திரம் கிமி ஆண்டோனெல்லி, இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தொடர்ந்து ஆறாவது வெற்றியைப் பதிவு செய்யும் இலக்குடன் களமிறங்க உள்ளார்.

இந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இத்தாலிய வீரரான ஆண்டோனெல்லி, உலக பார்முலா ஒன் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னிலை வகித்த ஓட்டுநர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கடந்த வாரம் மொனாக்கோவில் நடைபெற்ற போட்டியில் தகுதிச்சுற்றில் முதலிடத்தைப் பிடித்ததோடு, இறுதிப் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற அவர், தற்போது மிகச் சிறந்த பார்மில் உள்ளார்.

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸிலும் அவர் வெற்றி பெற்றால், தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்ற பார்முலா ஒன் வரலாற்றின் மிகச் சிறந்த ஓட்டுநர்களின் சாதனைப் பட்டியலில் இடம்பிடிப்பார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *