சனுசி மீதான தேசத்துரோக வழக்கு விசாரணை... புதிய தேதி அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், நவம்பர் 6: கெடா மந்திரி பெசார் சனுசி நோர் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணைக்கான புதிய தேதியை உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் நிர்ணயித்துள்ளது.

சனுசி சமர்ப்பித்த பிரதிநிதித்துவங்கள் இன்னும் சட்டத்துறை அலுவலகத்தின் பரிசீலனையில் இருப்பதால், அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று துணை அரசு வழக்கறிஞர் அப்துல் மாலிக் அயோப் கூறியதை அடுத்து, நீதிபதி அஸ்லம் ஜைனுதீன் அடுத்த நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு டிசம்பர் 10ஆம் தேதி திட்டமிட்டார்.

இதுவே இறுதி தேதியாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அஸ்லம் நீதிமன்றத்தில் கூறினார்.

கடந்த, செப்டம்பர் மாதம் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷாவிடம்,  கடந்த ஆண்டு ஜூலை மாதம் செராமாவில் தாம் தெரிவித்த கருத்துகளுக்காக சனுசி மன்னிப்புக் கேட்டார்.

தமத்யு கருத்துகள் சுல்தானின் உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகியவற்றால் இவ்விவகாரம் திரிக்கப்பட்டதாகக் கூறி, சுல்தான் ஷராஃபுதீனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறினார்.

இருப்பினும்,ரச குடும்பத்திற்கு எதிராக தேசத்துரோக அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *