சனுசி இனி வரக்கூடாது! - PN உத்தரவு!

top-news

சிரம்பான், ஜூலை 26: நெகிரி செம்பிலான் தேர்தலில் பிரச்சாரம் செய்வதை பெரிகாத்தான் நேஷனல்  தேர்தல் இயக்குனர் சனுசி நோர் தொடர முடியாது என்று PN தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார்  தெரிவித்துள்ளார்.

சனுசி விலகி இருக்க வேண்டும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி விடுத்த அழைப்பை PN கவனத்தில் எடுத்துக்கொண்டதாக சம்சுரி கூறினார். 

அரசியல் பிரச்சாரத்திற்கு வெளியே, நாங்கள் இருவரும் முதலமைச்சர்கள், மேலும் எங்கள் மாநிலங்களில் எங்களுக்குப் பொறுப்புகளும் உள்ளன என்று நேற்று  இரவு PN கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் சம்சுரி கூறினார். சனுசி கெடாவின் முதலமைச்சராகவும், சம்சுரி திரெங்கானுவின் முதலமைச்சராகவும் உள்ளனர்.

வியாழக்கிழமை இரவு ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் மலாய், சீன மற்றும் இந்திய அடையாளம் குறித்து சனுசி தெரிவித்த கருத்துக்களுக்காக அவர் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். மலாய்க்காரர்களுக்கு தனா மலாயு மட்டுமே தாயகமாக உள்ளது என்றும், சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் முறையே சீனாவும் இந்தியாவும் உள்ளன என்றும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *