சனுசி பதவி MIPP சுப்ரமணியத்திற்கு! - அஸ்மின் அலி, ராட்ஸி ஜிடின் PN பதவிகளிலிருந்து நீக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 18 : நேற்று இரவு பெரிகாத்தான் நேஷனலில் இருந்து இரண்டு பெர்சாத்து  தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் துணைப் பொதுச்செயலாளர் அஸ்மின் அலி தனது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் பெர்சாத்து உதவித் தலைவர் ராட்ஸி ஜிடினுக்குப் பதிலாக பாஸ் தேர்தல் இயக்குநர் சனுசி நோர் பெரிகாத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநராகப் பொறுப்பேற்பார் என்றும் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் அறிவித்துள்ளார்.

வரவிருக்கும் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஒரு அறிக்கையில் பாஸ் உதவித் தலைவருமான சம்சுரி குறிப்பிட்டுள்ளார்.

பெரிகாத்தான் நேஷனலின் பொருளாளராக சனுசி வகித்த முந்தைய பதவியை இப்போது மலேசிய இந்திய மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எஸ். சுப்பிரமணியம் ஏற்பார் என்றும் அவர் கூறினார்.

அஸ்மினுக்குப் பதிலாக வேறு யாரையும் சம்சுரி குறிப்பிடவில்லை!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *