டி.ஏ.பி விவகாரத்தில் அவசரப்படமாட்டேன்! நிதானமாக முடிவெடுப்பேன்! அன்வார் விளக்கம்!

top-news

செப்டம்பர் 25,

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் பதவி விலகலுக்கானக் கோரிக்கை குறித்து நிதானமாக முடிவெடுக்கவிருப்பதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். பிரதமராகவும் பக்காத்தான் கூட்டணியின் தலைவராகவும் நான் நிதானத்தைக் கடைப்பிடிக்க விரும்புகிறேன். அந்தோணி லோக்கின் அமைச்சர் பதவி என்பது அவர் ஒருத்தரைச் சார்ந்தது மட்டுமல்ல. அது டி.ஏ.பி, பக்காத்தான் கூட்டணி என பலதரப்பட்டவர்களின் அங்கீகாரம் என்பதால் இது குறித்து தாம் மேலும் கலந்துரையாடல்களை நடத்துவதாக Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

தற்போது நான் பிரதமராகவும், அந்தோணி லோக் அமைச்சராகவும் மலேசியாவுக்கான நலனை உறுதிப்படுத்தும் பொறுப்பில் இருக்கிறோம். அதற்கான பயணத்தில் இப்போது இருக்கிறோம். மலேசியா திரும்பியதும் பக்காத்தான் தலைவர்களாக நாங்கள் இது குறித்து விவாதிப்போம் என பிரதமர் அன்வார் தெரிவித்தார். அந்தோணி லோக்கின் ராஜினாமாவை அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாகவோ, பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளின் பிளவுகளாகவோ சித்தரிக்க வேண்டாம் என்றும், ஊழலுக்கு எதிரான கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதால் தனிப்பட்ட முறையில் தாம் மதிப்பதாகவும் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *