பிரதமர் அன்வார் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 10-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

பிரதமரின் மூத்த செய்திச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா இதனைத் தெரிவித்தார். மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் பிரதமர் சுமார் இரண்டு நாட்கள் இருப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், பிரதமரின் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை நடைமுறைகள் அனைத்தும் சுமூகமாக நடைபெற பிரார்த்திக்குமாறு துங்கு நஷ்ருல் கேட்டுக்கொண்டார்.

“பிரதமரின் அனைத்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை நடைமுறைகளும் சுமூகமாக நடைபெறவும், அவருக்கு நீண்டகால ஆரோக்கியம் கிடைக்கவும் நாம் பிரார்த்திப்போம். இதன் மூலம் அவர் விரைவில் வழக்கம்போல் தனது பணிகளைத் தொடர முடியும் என நம்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

பிரதமரின் தற்போதைய உடல்நிலை தொடர்பாக விரிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மருத்துவ நிபுணர்கள் குழுவின் தொடர்ச்சியான கண்காணிப்பில் அவர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *