கிராம மேம்பாட்டுக்கு RM 1பில்லியன்! - ANWAR
- Sangeetha K Loganathan
- 27 Oct, 2024
அக்தோபர் 27,
கிராமிய மேம்பாடுகளைச் செயல்படுத்த மடானி அரசு முக்கியத்துவம் அளிக்கும் என பிரதமர் அன்வார் உறுதியளித்தார். மடானி செழுமைத் திட்டத்தின் வாயிலாக கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த குறைந்தபட்சம் RM50,000 முதல் அதிகபட்சமாக RM100,000 வரையில் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். இத்திட்டைத்தைக் கிராம ஆணையங்கள் மூலமாகச் செயல்படுத்தவிருப்பதால் ஊர் தலைவர்கள் குறிப்பிட்ட கிராமங்களில் இயங்கும் அமைப்புகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கிராமங்களை மேம்படுத்தலாம் என அவர் வலியுறுத்தினார். 2025 பட்ஜெட்டில் முன்முயற்சிக்காக வழங்கப்பட்ட RM1 பில்லியன் முழு ஒதுக்கீடுகளையும் கிராமங்கள் பயன்படுத்த முறையானக் கலந்துரையாடல்களையும் நடத்தும்படி பிரதமர் அன்வார் கேட்டுக் கொண்டார்.
Perdana Menteri Anwar menegaskan komitmen kerajaan Madani terhadap pembangunan luar bandar melalui Madani Sejahtera, menyediakan bantuan RM50,000 hingga RM100,000. Beliau menggesa perbincangan telus dalam penggunaan dana RM1 bilion.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *